மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பாலாலேனில் மலசலகூடம் கட்ட வெட்டப்பட்ட குழியில் விழுந்து சிறுமியொருவர் பலியாகியுள்ளார்.
காத்தான்குடி ஆறாம் குறிச்சி பாவா வீதியிலுள்ள ரமீஸ் பாத்திமா ரஜா எனும் 4 நான்கு வயது சிறுமியே சம்பவத்தில் பலியாகியுள்ளார்.
குறித்த சிறுமி, மாலை 4 மணியளவில் தனது வீட்டுக்கருகிலுள்ள பெரியம்மாவின் வீட்டில் வீடு கட்டுவதற்காக போடபட்ட அத்திவாரத்தில் நின்று விளையாடிக் கொண்டிருந்த போது, அந்த அத்திவாரத்தினுள் மலசல கூடம் நிர்மாணிப்பதற்காக வெட்டப்பட்ட குழியினுள் விழுந்துள்ளார்.
சிறுமியை காணவில்லை என பெற்றாரும் அவரது உறவினர்களும் தேடிய நிலையில் இந்த சிறுமி மாலை 6.30 அளவில் மலசல கூடம் நிர்மானிப்பதற்காக வெட்டப்பட்ட குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கு உயரிழந்துள்ளார்.
சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை நடாத்திவருகின்றனர்.
மலசலகூட குழியில் விழுந்து சிறுமி பலி ; மட்டக்களப்பில் பரிதாபம்
Reviewed by Unknown
on
November 01, 2015
Rating:
Reviewed by Unknown
on
November 01, 2015
Rating:





No comments: