இடை நிறுத்தப்பட்டுள்ள திருகோணமலை மக்கேசர் விளையாட்டரங்கை மீண்டும் கட்டுமாணப்பணிகளை மேற்கொண்டு, திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம் ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
சுமார் ஒரு வருடங்களுக்கு முன்பாக மனித எலும்பு சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில் கட்டுமாணப்பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன் அப்படிவங்கள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் விளையாட்டு அபிவிருத்திதிணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ருவான்சந்திர மற்றும் கிழக்கு மாகாண சுகாதார
அமைச்சர் எச்.எம் நசீர் ஆகியோர் இன்று திருகோணமலை மக்கேசர் விளையாட்டரங்கை பார்வையிட்டனர்.
அமைச்சர் எச்.எம் நசீர் ஆகியோர் இன்று திருகோணமலை மக்கேசர் விளையாட்டரங்கை பார்வையிட்டனர்.
பார்வையிட்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன் அவர் மேலும் அப்பகுதியின் கட்டுமாணப்பணிகளை ஆரம்பிப்பது தொடர்பாகவும் எதிர்வரும் வருடம் நிறைவேற்றுவதற்கு உத்தேசித்துள்ளதாக நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மேலதிக திட்டங்களை மேற்கொள்ளவது தொடர்பாகவும் ஆராய்வதாக குறிப்பிட்டார்.
திருகோணமலை விளையாட்டு மைதானம் மீண்டும் திறக்கப்படும்!
Reviewed by Unknown
on
November 13, 2015
Rating:
Reviewed by Unknown
on
November 13, 2015
Rating:



No comments: