தென்பகுதி கடற்பரப்பில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.50 அளவில் விழக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ள விண் பொருளை கண்காணிப்பதற்காக விசேட திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விண்வெளி ஆராய்ச்சி நிலையம் குறிப்பிட்டுள்ளது.
தங்காலை பகுதியிலிருந்து இந்த கண்காணிப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் பிரியங்கா கோரலகம தெரிவித்துள்ளார்.
WT 1190 F எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விண்பொருளை தங்காலையில் இருந்து கண்காணிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விண்பொருள் விழக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நேரத்திற்கு சுமார் 2 மணித்தியாலம் முன்பிருந்தே கண்காணிப்புகளை மேற்கொள்வது உகந்ததாகும் என்றும் இலங்கை விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், குறிப்பிட்ட விண்பொருள் கடலில் விழுவது குறித்து அச்சமடையத் தேவையில்லை என கொழும்பு பல்கலைக்கழக பௌதீக விஞ்ஞானப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
தென்பகுதி கடலில் விழும் விண்பொருள் குறித்து கண்காணிக்க நடவடிக்கை
Reviewed by Unknown
on
November 13, 2015
Rating:
Reviewed by Unknown
on
November 13, 2015
Rating:


No comments: