மட்டக்களப்பு மாட்டத்தில் கடந்த சில தினங்களாக செய்துவரும் அடைமழை காரணமாக பொதுமக்கள் பலத்த இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
நவகிரி, உன்னிச்சை, உறுகாமம், கித்துள்வெவ, கட்டுமுறிவு, போன்ற பெரிய குளங்களின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளதாக குறித்த குளங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பில் மைலம்பாவெளியில் 50.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மட்டக்களப்பு நகரில் 54.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பாசிக்குடா பகுதியில் 116 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கெ.சூரியகுமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள பல கிராமங்களின் உள்வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதானால் கிராம மக்கள் உள்ளூர் போக்குவரத்துக்களில் பலத்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
தாழ்நிலப்பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பொரும்போக வேளாண்மைகள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மண்முனை தென்எருவில் பற்று பிரதேசத்திலுள்ள கிராமங்களில் தேங்கிநிற்கும் வெள்ள நீர் வாய்க்கால்ளைத் தேண்டி ஆறு மற்றும், கடலைச் சென்றடைவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக மண்முனை தென்எருவில்பற்று பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.
தொடர்ச்சியாகப் பெய்யும் மழை: மட்டக்களப்பிலும் பாதிப்பு
Reviewed by Unknown
on
November 16, 2015
Rating:
Reviewed by Unknown
on
November 16, 2015
Rating:




No comments: