Mountain View Mountain View

தமிழ் அரசியல் கைதிகளில் இருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் இருவர் மிகவும் மயக்கமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதாக தெரிய வருகின்றது.

உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் திருக்கோவிலைச் சேர்ந்த முரளிதரன் மற்றும் கிரானைச் சேர்ந்த யோகராசா ஆகிய இருவரும் இன்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் சோர்வடைந்து காணப்பட்டனர்.

இந்தநிலையில், அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் அவர்களை மீண்டும் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 10 தமிழ் அரசியல் கைதிகள் உள்ள நிலையில் கடந்த வாரம் ஒரு தமிழ் அரசியல் கைதி பிணையில் விடுவிக்கப்பட்டார். 
இதனையடுத்து 9 தமிழ் அரசியல் கைதிகள் கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் அரசியல் கைதிகளில் இருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை தமிழ் அரசியல் கைதிகளில் இருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை Reviewed by Unknown on November 16, 2015 Rating: 5

No comments: