Mountain View Mountain View

சமாதானக் கல்விப்பிரிவினால் வரலாற்றில் முதல் தடவையாக ஒழுங்குசெய்யப்பட்ட ஹஜ் கலாசார விழா

(ஏஎம் றிகாஸ் ஏறாவூர் நிருபர்)
மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வியலுவலகத்தின் சமாதானக் கல்விப்பிரிவினால் வரலாற்றில் முதல் தடவையாக ஒழுங்குசெய்யப்பட்ட ஹஜ் கலாசார விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.


சமாதானக் கல்வி இணைப்பாளர் எம்ஜிஏ நாஸர் தலைமையில் ஏறாவூர்-அறபா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஏஎஸ் இஸ்ஸதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் எம்ஐஎம். தஸ்லிம் உள்ளிட்ட பல பிரமுகர்கள் இங்கு பிரசன்னமாயிருந்தனர்.

காத்தான்குடி,கோறளை பற்று மேற்கு  மற்றும் ஏறாவூர் ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த ஏழு பாடசாலைகளின் மாணவர் குழுக்களது கலை நிகழ்ச்சிகள் இங்கு அரங்கேற்றப்பட்டதுடன் பெற்றார்கள் மற்றும் ஏறாவூர்- ஐயன்கேணி தமிழ் வித்தியாலய மாணவர்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டமை விஷேடமாகும்.

விழாவில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் விஷேட அன்பளிப்புக்கள் பாடசாலைகளுக்கும் அதிதிகளுக்கும் நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன.
முஸ்லிம்களின்  கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் பல்வேறு நிகழ்வுகள் இதன்போது அரங்கேற்றப்பட்டன.


கடந்த சுமார் மூன்று தசாப்த காலமாக நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழலினால் இனங்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கசப்புணர்வுகள் துடைத்தெறிந்து மீண்டும் இன ஐக்கியம், சமாதானம், சகவாழ்வு மற்றும் இனநல்லுறவை மாணவர் மத்தியிலிருந்து  கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கமைய   இவ்விழா ஏற்பாடுசெய்யப்பட்டதாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் சமாதானக் கல்வி இணைப்பாளர் எம்ஜிஏ நாஸர் தெரிவித்தார்.









சமாதானக் கல்விப்பிரிவினால் வரலாற்றில் முதல் தடவையாக ஒழுங்குசெய்யப்பட்ட ஹஜ் கலாசார விழா  சமாதானக் கல்விப்பிரிவினால் வரலாற்றில் முதல் தடவையாக ஒழுங்குசெய்யப்பட்ட  ஹஜ் கலாசார விழா Reviewed by Unknown on November 02, 2015 Rating: 5

No comments: