களுவாஞ்சிக்குடி முகாமைப் பிள்ளையார் ஆலயமும், பொது மக்களும் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில்நேற்று மாலை நடைபெற்றது.
முகாமைப் பிள்ளையார் ஆலய தலைவர் நா.நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், சா.வியாளேந்திரன், ஞா.ஸ்ரீநேசன், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம், களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை வைத்தியர் எஸ்.சுகுணன், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம், மற்றும் ஆலய நிருவாகத்தினர், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், சா.வியாளேந்திரன், ஞா.ஸ்ரீநேசன் ஆகியோர் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவிப்பு
Reviewed by Unknown
on
November 02, 2015
Rating:



No comments: