வெள்ளத்துடன் வந்த முதலை ஒன்று வீட்டினுள் புகுந்தது குடும்பத்தவர்களை அலற வைத்த சம்பவம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக தென்மாரட்சி, இராமவில் பிரதேசத்தில் வெள்ளத்துடன் வந்த முதலை ஒன்று வீட்டினுள் புகுந்து குடும்பத்தவர்களை அலறவைத்துள்ளது.
குடும்பத்தவர்கள் அதனை விரட்டிய நிலையில், அருகிலிருந்த கேணிக்குள் பாய்ந்த முதலையை பிடிப்பதற்கு பொலிஸார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தை சேர்ந்தவர்களுடன் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் வீட்டுக்குள் புகுந்த முதலை
Reviewed by Unknown
on
November 16, 2015
Rating:
Reviewed by Unknown
on
November 16, 2015
Rating:



No comments: