கொழும்பில் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ள அகில இலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
வரவு செலவு திட்டத்தில் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பினையும் உள்ளடக்குமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் விசேட கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர் கலாசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் யு.உதயவேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அகில இலங்கை பட்டதாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் தம்மிக்க முணசிங்க கலந்துகொண்டார்.
பட்டதாரிகள் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே பட்டதாரிகளுக்கான உரிமையைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் யு.உதயவேந்தன், அரசியல்வாதிகளை நம்பி எந்த பிரயோசனமும் ஏற்படப் போவதில்லையென தெரிவித்தார்.
இதன் காரணமாக வரவுசெலவுத் திட்டத்தில் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு தொடர்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என மேற்கொள்ளப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கம் பூரண ஆதரவு வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் பட்டதாரிகள் தொடர்பில் எந்தவித ஆக்கபூர்வமான செயற்பாட்டினையும் மேற்கொள்ளவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள், பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.
பட்டதாரிகள் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்திற்கு மட்டக்களப்பிலும் ஆதரவு
Reviewed by Unknown
on
November 16, 2015
Rating:

No comments: