மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை பெய்துவருவதுடன் கடந்த 24 மணித்தியாலயங்களில் 100.9 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.
இடைவிடாது தொடர்ந்து பெய்யும் அடைமழை காரணமாக பல வீதிகள், பாசாலைகள் மற்றும் பொது இடங்கள் என்பள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
காத்தான்குடி, புதிய காத்தான்குடி, ஆரையம்பதி, கொக்கட்டிச்சோலை மற்றும் களுவாஞ்சிக்குடி உட்பட பல பிரதேச செயலாளர் பிரிவுகளில் தொடர்மழையினால் தாழ்ந்த பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
அத்துடன் புதிய காத்தான்குடி பகுதியில் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பில் தொடர் மழை; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Reviewed by Unknown
on
November 03, 2015
Rating:
Reviewed by Unknown
on
November 03, 2015
Rating:






No comments: