Mountain View Mountain View

மட்டக்களப்பில் பலத்த மழை - பிரதான குளங்களின் வான் கதவுகள் திறப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக மாவட்டத்தின் பிரதான இரண்டு குளங்களின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



அதற்கமைவாக உன்னிச்சை குளத்தில் 25.4 அங்குலம் வரை நீர் உயர்வடைந்துள்ளமையினால் குளத்தின் பிரதான வான்கதவுகள் மூன்றும் 1 அடி வரை திறக்கப்பட்டுள்ளதுடன், மாவட்டத்தின் மற்றுமொரு பிரதான குழமாகிய உறுகாமக் குளத்தின் நீர்மட்டம் 14.7 அங்குலம் வரை உயர்வடைந்துள்ளமையினால் இக்குளத்தின் பிரதான வான்கதவுகள் இரண்டும் 2 அடிவரை திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக மாவட்ட மக்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளதக தெரியவருகின்றது. 

மட்டக்களப்பில் பலத்த மழை - பிரதான குளங்களின் வான் கதவுகள் திறப்பு மட்டக்களப்பில் பலத்த மழை - பிரதான குளங்களின் வான் கதவுகள் திறப்பு  Reviewed by Unknown on November 03, 2015 Rating: 5

No comments: