Mountain View Mountain View

மட்டக்களப்பில் ஐக்கிய நாடுகள் தினவிழா

ஐ.நா சபையின் 60ஆவது ஆண்டு நிறைவு தின விழா இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.






மட்டக்களப்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டதையடுத்து மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

நிகழ்விற்கு மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டதுடன் ஐ.நா பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அத்துடன் ஐ.நா சபையின் வெளிக்கள இணைப்பாளர் மார்க் பெட்டர்சன், உலக தொழில் அமைப்பின் தேசிய திட்ட இணைப்பாளர் கே.சிவப்பிரகாசம், யுனிசெப் திட்ட அதிகாரி எஸ்.ரவீந்திரன் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தினர்.
இன்றைய நிகழ்வில் ஐ.நாடுகள் செயலாளர் நாயகம் பாங்கீ மூனின் வாழ்த்துச்செய்தியும் வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


மட்டக்களப்பில் ஐக்கிய நாடுகள் தினவிழா மட்டக்களப்பில் ஐக்கிய நாடுகள் தினவிழா Reviewed by Unknown on November 05, 2015 Rating: 5

No comments: