Mountain View Mountain View

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்

நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் இன்று வியாழக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தகவல்வெளியிட்டுள்ளது.


அத்துடன் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்வதோடு கிழக்கு கடலோரங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதுடன் மின்னல் அபாயங்களும் ஏற்படக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் அனைவரையும் அவதானத்துடன் இருக்குமாறு வானிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் Reviewed by Unknown on November 05, 2015 Rating: 5

No comments: