மட்டக்களப்பு, மயிலம்பாவெளி பிரதேசத்தில் அறிவொளி அப்பியாசக் கொப்பி உத்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
மயிலம்பாவெளி பிரதேசத்தில் இதுவரைகாலமும் சுயமுயற்சியால் அப்பியாசக் கொப்பிகள் தயாரிக்கும் கைத்தொழிலில் ஈடுபட்டுவந்த குடும்பம் ஒன்றிற்கு,
சுவீஸ்நாட்டில் உள்ள புலம்பெயர் உறவினர் ஒருவர் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான இயந்திரம் ஒன்றை வழங்கி குறித்த தொழிற்சாலையின் பங்குதாரராக மாறியுள்ளார்.
இதன் ஊடாக குறித்த குடும்பத்தின் அப்பியாசக் கொப்பி தயாரிக்கும் கைத்தொழில் விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் இந்த தொழிற்சாலையின் ஊடாக பிரதேசத்திற்கே தேவையான கொப்பிகளை வழங்கக்கூடிய வளர்ச்சி ஏற்படுமென தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான உற்பத்தி நிலையங்களை இனிவரும் காலங்களில் அரசாங்கமும் இமாகாண சபைகளும் உருவாக்குவதன் ஊடாக பிரதேசத்தில் உள்ள பலர் வேலைவாய்ப்புக்களை பெறுவதுடன் எமது மண்ணின் உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கலாமெனவும் பயனாளிகள் கருத்து தெரிவித்தனர்.
இன் நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர் அவர்களும் கிராம சேவையாளர், சமூர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டு உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்தனர்.
மட்டு. மயிலம்பாவெளியில் அப்பியாசக் கொப்பி தயாரிக்கும் கைத்தொழில் நிலையம் திறப்பு!
Reviewed by Unknown
on
November 13, 2015
Rating:
Reviewed by Unknown
on
November 13, 2015
Rating:







No comments: