மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் மஞ்சள் கோட்டில் நபரொருவரை மோதிட்டு தப்பிச் சென்ற காரிலிருந்து கத்திகள் மற்றும் பொல்லுகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் காரும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பொறுப்பதிகாரி ரி.துஸார தெரிவித்தார்.
இன்று காலை கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த இக்கார்; மஞ்சந்தொடுவாய் பிரதான வீதியில் மஞ்சள் கோட்டில் ஒருவரை மோதி காயப்படுத்தி விட்டு தப்பியோடியுள்ளது.
பொலிஸார் துரத்திச் சென்று காரை கைப்பற்றி பரிசோதனை செய்த போது அதன் பின்புறத்திலிருந்து பாரியளவிலான கத்தி, பொல்லுகள், சங்கிலி, தடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.அதிலிருந்த நால்வரும் கைது செய்யப்பட்டனர்.கைப்பற்றப்ட்ட நபர்களும் ஆயுதங்களும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மஞ்சள் கோட்டில் நபரை மோதிவிட்டு தப்பியோடிய நபர்களின் காரிலிருந்து ஆயுதங்கள் மீட்பு- நால்வர் கைது
Reviewed by Unknown
on
November 12, 2015
Rating:
Reviewed by Unknown
on
November 12, 2015
Rating:


No comments: