Mountain View Mountain View

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

14 கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று (12) நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர் கே.என்.சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
பிரதான தபால் நிலையம் மற்றும் உப அஞ்சல் அலுவலகங்களிலுள்ள அனைத்து ஊழியர்களும் சுகயீன விடுமுறை என்ற அடிப்படையில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கையானது 24 மணித்தியாலங்களுக்கு முன்னெடுக்கப்படும் எனவும் கே.என்.சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு நாடளாவிய ரீதியில் தபால் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு Reviewed by Unknown on November 13, 2015 Rating: 5

No comments: