நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று திங்கட்கிழமை வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சனிக்கிழமை இதற்குப் பதிலாக பாடசாலை நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தொடரும் மழை மற்றும் வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிக்கல்கள் காரணமாகவும், பல பாடசாலைகளில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டிருப்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாளை செவ்வாய்க்கிழமை நிலைமைக்கு ஏற்ப அந்தந்த கல்வி வலயங்களின் கல்விப் பணிப்பாளர்கள் உரிய பணிப்புரைகளை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சீரற்ற காலநிலை; வட மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை
Reviewed by Unknown
on
November 16, 2015
Rating:
Reviewed by Unknown
on
November 16, 2015
Rating:


No comments: