மியன்மார் தேர்தலில் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளமைக்காக அந்தக் கட்சியின் தலைவியும் நோபல் பரிசு பெற்றவருமான ஆங்சாங் சூகிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மியன்மார் மக்கள் வழங்கிய இந்த உறுதியான ஆணையானது அந்த நாட்டை எதிர்காலத்தில் செழிப்பு மற்றும் வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும் தங்களது எழுச்சிமிக்க தலைமைத்துவத்தின் மீது, அவர்கள் கொண்டுள்ள ஆழமான நம்பிக்கையின் வெளிப்பாடு என, அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் தங்களது நாட்டில் இடம்பெற்ற ஜனநாயகத்திற்கான அமைதிப் போராட்டங்களில் ஜனநாயகத்தை ஏற்படுத்திய தேசிய கட்சியின் தனிப்பட்ட சாதனையே இது என ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆங்சாங் சூகிக்கு வாழ்த்து!
Reviewed by Unknown
on
November 16, 2015
Rating:
Reviewed by Unknown
on
November 16, 2015
Rating:


No comments: