Mountain View Mountain View

வாகனப் புகை பரிசோதனைக் கட்டணத்துக்குப் பதில் சாலை வரி?

வாகனங்களின் நச்சுப் புகை பரிசோதனைக் கட்டண அதிகரிப்பிற்குப் பதிலாக சாலை வரியொன்றை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


மூன்று வருடங்களுக்கும் கூடுதலாக பயன்பாட்டில் இருக்கும் வாகனங்கள் வருடாந்தம் நச்சுப் புகை பரிசோதனையொன்றை மேற்கொள்ளும் நடைமுறைக்கான கட்டணம் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அதிகரிக்கப்பட்டது.

இதுவரை காலமும் 1200 ரூபாவாக இருந்த குறித்த கட்டணம் தற்போது 5000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தக் கட்டண அதிகரிப்பு குறித்து ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மட்டுமன்றி பொதுமக்கள் தரப்பில் இருந்தும் பலத்த எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக குறித்த கட்டணத்தை அதிகரிப்பதற்குப் பதில் புதிதாக வாகனங்களுக்கான சாலை வரியொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும் இது தொடர்பான இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படாத நிலையில் கலந்தாலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வாகனப் புகை பரிசோதனைக் கட்டணத்துக்குப் பதில் சாலை வரி? வாகனப் புகை பரிசோதனைக் கட்டணத்துக்குப் பதில் சாலை வரி? Reviewed by Unknown on November 29, 2015 Rating: 5

No comments: