Mountain View Mountain View

திருகோணமலை வைத்தியசாலையில் குரங்குகள்: நோயாளர்கள் பாதிப்பு

திருகோணமலை அரசாங்க பொது வைத்தியசாலையில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக நோயாளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். 

குரங்குகளின் நடமாட்டத்தால் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் உள்ள குழந்தைகளை வைத்திருக்கும் பகுதிக்குள் சென்ற குரங்குகள் கூட்டம் நோயாளர்களின் உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றதுடன் பொருட்களை சேதப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குரங்குகள் சென்றமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் அச்சமடைந்ததாகவும் சில குழந்தைகள் கட்டிலில் இருந்து கீழே விழுந்ததால் காயம் ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

நோயுடன் போராடும் பொதுமக்கள் குரங்குகள் கூட்டத்தின் அட்டகாசத்தினால் மேலும் மன உழைச்சலுக்கு உள்ளாகி வருவதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறிப்பாக வைத்தியசாலை நிர்வாகம் இந்த விடயத்தில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் இதனால் திருகோணமலை நகரசபையிடம் பாதிக்கப்பட்ட மக்கள் முறையிட்டுள்ளனர் என்றும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
திருகோணமலை வைத்தியசாலையில் குரங்குகள்: நோயாளர்கள் பாதிப்பு திருகோணமலை வைத்தியசாலையில் குரங்குகள்: நோயாளர்கள் பாதிப்பு Reviewed by Unknown on November 29, 2015 Rating: 5

No comments: