மட்டக்களப்பு மாவட்ட நீர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
மாவட்ட அரசாங்க பி.எஸ்.எம். சாள்ஸ் தலைமையில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நீர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான சமர்ப்பணங்கள் துறைசார்ந்த நிபுணர்களால் முன்வைக்கப்படவுள்ளதோடு அரசாங்க அதிபரின் தலைமையிலான மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் பிரதானிகள் அடங்கிய நீர் பாதுகாப்பு திட்ட செயலாற்றுகை குழுவொன்றும் அன்றைய தினம் உருவாக்கப்படவுள்ளது.
இக்கலந்துரையாடல் நிகழ்வில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மேலதிக பொது முகாமையாளர், பிரதி பொது முகாமையாளர், உதவி பொது முகாமையாளர் (கிழக்கு), மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் ஆகியோர்களுடன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் நீர் பாதுகாப்பு திட்டத்தோடு தொடர்புடைய அரச திணைக்களங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சமூகவியலாளர் எம்.எஸ்.எம். சறூக் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நீர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான கலந்துரையாடல்
Reviewed by Unknown
on
November 11, 2015
Rating:
Reviewed by Unknown
on
November 11, 2015
Rating:


No comments: