Mountain View Mountain View

நீர்வழிப்படகுப்பாதை பயணிகள் தங்குமடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் காயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும்மழை காரணமாக களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடத்தில் நீர்வழிப் படகுப்பாதை பயணிகள் தங்குமடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் கட்டடம் முற்றாக சேதமடைந்துள்ளது.



காலை பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாக  குறித்த கட்டடம்  இடிந்து விழுந்துள்ளது.

குருக்கள்மடம் –மண்டூருக்கடையில் வாவியுடான நீர்வழி படகுப்பாதை பயணிகள் அந்த கட்டடத்தையே தங்குமிடமாக பயன்படுத்தி வந்தனர்.

தற்போது இந்த கட்டடம் உடைந்து விழுந்துள்ளதால் பயணிகள் கொட்டும் மழையில் நனைந்து பாதையை எதிர்பார்த்து நிற்பதை அவதானிக்க முடிகின்றது.

ஸ்தலத்திற்கு விஜயம் செய்த களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் கோபாலரத்தினம், அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் அரசாங்க அதிபர் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளருடன் தொடர்பு கொண்டு உடனடியாக தற்காலிக நிலையமொன்றை அமைத்து தருவதாகவும் ஜனவரி மாதத்தில் புதிய தங்குமடத்தை அமைக்க முடியுமெனவும்  தெரிவித்தார். 

நீர்வழிப்படகுப்பாதை பயணிகள் தங்குமடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் காயம் நீர்வழிப்படகுப்பாதை பயணிகள் தங்குமடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் காயம் Reviewed by Unknown on November 15, 2015 Rating: 5

No comments: