இன்று தித்திக்கும் தீபத்திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் எமது உலகவாழ் சொந்தங்களுக்கும் இணையத்தள வாசகர்களுக்கு எம் இணையக் குழுமத்தின் சார்பில் இனிய தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
இன்றைய தீபத்திருநாளின் தத்துவங்களை
இந்து மக்கள் ஒவ்வொருவரும் நன்கு அறிந்திருத்தல் முக்கியம். சமய நம்பிக்கைகள் தொடர்பாக நம் அனை வரிடமும் ஒரேவிதமான நிலைப்பாடு இருப்பதில்லை. எனினும் சமயம் கூறும் தத்துவங்களில் ஏராளமான உண்மைகள் பொதிந்திருப்பதை எவராலும் மறுக்க முடியாது.
இந்து மக்கள் ஒவ்வொருவரும் நன்கு அறிந்திருத்தல் முக்கியம். சமய நம்பிக்கைகள் தொடர்பாக நம் அனை வரிடமும் ஒரேவிதமான நிலைப்பாடு இருப்பதில்லை. எனினும் சமயம் கூறும் தத்துவங்களில் ஏராளமான உண்மைகள் பொதிந்திருப்பதை எவராலும் மறுக்க முடியாது.
கங்கா ஸ்நானம் முடிந்தபின் பூஜையறையில் மகாலட்சுமி விக்ரகம் அல்லது படம் வைத்து அலங்கரித்து, இருபுறமும் விளக்கேற்றி, இனிப்புப் பண்டம் வைத்து, வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபடவேண்டும். பூஜை முடிந்தபின் சிறுவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழவேண்டும். இதனால் செல்வம் பெருகும். கன்னிகளுக்குத் திருமணம் கைகூடும். பிள்ளைப்பேறு கிட்டும். சுமங்கலிகள் மேன்மையடைவார்கள்.
நம் வீட்டு குலதெய்வத்தை- குறிப்பாக பெண் தெய்வங்களை நினைத்து, அவர்களுக்குப் பிடித்த உடை, நிவேதனங்களுடன் வணங்கவேண்டும். ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் செய்யலாம். தீபாவளியன்று செய்வது மேலும் சிறப்பாகும். நம் வீட்டில் இறந்துபோன முன்னோர்களுக்குப் பிரியமானவற்றைப் படைத்து அவர்கள் ஆசியைப் பெறவேண்டும். இதனால் நம் குடும் பத்திற்கும் வம்சத்திற்கும் நன்மை கிடைக்கும்.
BNN இணையத்தள வாசகர்களுக்கு தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !
Reviewed by Unknown
on
November 10, 2015
Rating:
Reviewed by Unknown
on
November 10, 2015
Rating:


No comments: