Mountain View Mountain View

தேசிய துக்க தினத்தில் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு கோரிக்கை

தேசிய துக்க தினத்தில் தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு அரசாங்கம் கோரியுள்ளது.

எதிர்வரும் 12ம் திகதி தேசிய துக்க தினம் அனுஸ்டிக்கப்பட உள்ளது.

மாதுலுவாவே சோபித தேரரின் மறைவை முன்னிட்டு தேசிய துக்க தினம் அனுஸ்டிக்கப்பட உள்ளதாகவும், தேசிய கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும் சுதேச விவகார அமைச்சு கோரியுள்ளது.

அமைச்சின் சார்பில் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரட்னசிறி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
தேசிய துக்க தினத்தில் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு கோரிக்கை தேசிய துக்க தினத்தில் தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு கோரிக்கை Reviewed by Unknown on November 10, 2015 Rating: 5

No comments: