23 உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலத்தினை எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
23 உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நாளைய தினத்துடன் நிறைவடையவுள்ளது.
இந்த நிலையில் அவற்றின் பதவிக்காலத்தினை நீடிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் இன்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்சை , ஸ்ரீ ஜயவர்தனபுர – கோட்டே , கம்பஹா, நீர்கொழும்பு, குருணாகல், கண்டி, நுவரெலியா, மாத்தளை, மாத்தறை, பதுளை, காலி, அம்பாந்தோட்டை, இரத்தினபுரி, அனுராதபுரம் மற்றும் கல்முனை ஆகிய மாநகர சபைகளின் பதவிக்காலம் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொல்லன்னாவ நகர சபை, கொட்டிகாவத்தை – முல்லேரியாவ பிரதேச சபை, குண்டசாலை பிரதேச சபை, கடவஸ்தர மற்றும் கங்கவட்டகோரள பிரதேச சபை, அம்பாந்தோட்டை பிரதேச சபை,
சூரியவௌ பிரதேச சபை ஆகியவற்றின் பதவிக்காலமும் நீடிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலத்தினை நீடிப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
Reviewed by Unknown
on
December 31, 2015
Rating:
Reviewed by Unknown
on
December 31, 2015
Rating:


No comments: