Mountain View Mountain View

காலதாமதமின்றி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துங்கள் அஸாத்சாலி கோரிக்கை.!

உள்ளூராட்சி மன்ற தேர்தலை அரசாங்கம் காலதாமதமின்றி நடத்த வேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத்சாலி கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மக்கள் கொடுத்த ஆணைக்கு அமைய உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலம் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் எதிர்வரும் சித்திரை புது வருடத்துக்கு முன்னர் நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இதனால் தேர்தல் சட்டங்களில் ஜனாதிபதி உடனடியாக மாற்றங்களை மேற்கொண்டு எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த வேண்டும் என அஸாத் சாலி கேட்டுக்கொண்டுள்ளார்.
காலதாமதமின்றி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துங்கள் அஸாத்சாலி கோரிக்கை.!  காலதாமதமின்றி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துங்கள் அஸாத்சாலி கோரிக்கை.! Reviewed by Unknown on December 31, 2015 Rating: 5

No comments: