Mountain View Mountain View

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கை வருகை..!

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கை வருகைபாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், அமைச்சுகள் சிலவற்றுடன் 10 ஒப்பத்தங்களில் கைச்சாத்திடவுள்ளார்.
நான்காம் திகதி இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர், எதிர்வரும் 6 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்.
அத்துடன் எதிர்வரும் 6 ஆம் திகதி கண்டிக்கு விஜயம் செய்யும் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஶ்ரீதலதா மாளிகை, கண்டி நூதனசாலை, மீரா மக்காம் பள்ளிவாசல், ஜின்னா நிலையம் மற்றும் பேராதனை தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களுக்கும் செல்வார் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கை வருகை..! பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கை வருகை..! Reviewed by Unknown on January 01, 2016 Rating: 5

No comments: