எம் காதல் கவிஞர் செங்கதிரோன்
இரக்கமற்ற என்னவளே…
நான் இறக்க எண்ணமற்றவளே…
உறக்கம் என்றும் உன் நினைவே…
உன் இதயம் விற்றால் என்ன விலை…
தூதுவிட்டு தூக்கிலிட்டாய் விழியாலே…
நாடுவிட்டு நகர்ந்து விட்டேன் காதல் நரகினிலே..
மாது கண்டால் மரணமென்று…
மயங்கி நின்றேன் உன் இதயத்தெருவிலே…
நானும் என் காதல் மழையும் : இந்த காதல் வெறும் கதை அல்ல !
இரக்கமற்ற என்னவளே…
நான் இறக்க எண்ணமற்றவளே…
உறக்கம் என்றும் உன் நினைவே…
உன் இதயம் விற்றால் என்ன விலை…
தூதுவிட்டு தூக்கிலிட்டாய் விழியாலே…
நாடுவிட்டு நகர்ந்து விட்டேன் காதல் நரகினிலே..
மாது கண்டால் மரணமென்று…
மயங்கி நின்றேன் உன் இதயத்தெருவிலே…
நானும் என் காதல் மழையும் : இந்த காதல் வெறும் கதை அல்ல !
அனைவருக்கும் வணக்கம்!
எனது காதல் கதையை எழுதும் முன்பு...இந்த போட்டியில் சிறுகதை மட்டும் எழுத வேண்டும் என்று குறிப்பிட்டதால்...எனது கற்பனை குதிரையை..பந்தய குதிரையாக மாற்றி..இதோ என் காதல் கதையை...எழுதவிரும்புகிறேன்...
காதல் - எல்லாருக்கும் இந்த காதல் பொதுவானது. எப்ப? எப்படி நமக்கு வந்து சேரும்னு யாராலயும் சொல்ல முடியாது! அது போலதா என்னுடைய காதலும் . நான் பொழிய நினைப்பது காதல் மேகங்கள் மட்டும் அல்ல சில கண்ணீர் துளிகளும் கூட.ஒவ்வொருவருக்கும் காதலி எப்படிலாம் இருக்கணும் என்று ஒரு கனவுகள் இருக்கும். அந்த கனவுகள் ஒரு நாள் பலிக்க கூடும் அதுவும் பகல் நேரத்துல காதலி என்ற பெயர்ல....அது போல எனது காதல் கனவுகளும் என் மனசுல பொழிய ஆரம்பித்தது.
எனக்கு கவிதை எழுதவும் படிக்கவும் மிகவும் பிடிக்கும் .ஒரு கவிதையின் கருவறை நமக்கு பிடிச்ச பொன்னுத்த ...கவிதை எழத ஒருவரை காதலித்தால் போதும். அதனாலதான் என்னவோ ? அவளை பார்த்தது காதலித்து விட்டேன் இல்ல... இல்ல... கவிதை எழுத ஆரம்பித்து விட்டேன் !.
இதோ...அவளுடன் நனைந்த காதல் துளிகள்.
எனக்கே தெரில அவல ரொம்ப நாட்களா காதலிச்சிட்டு இருக்கணு.என்னோட காதல ஒரு கடிதத்துல எழுதி கொடுத்த ஒரு கவிதையாக...
""நாள் தோறும் உன்னை சூரியனை சுற்றும்கோள்களாக சுற்றி வருகிறேன்.உன் கண்களின் புவி ஈர்ப்பு விசையால்.....உன் செவ்விதழ்களின் புன்னகை வாசத்தால்...என்னவோ?""
அத படிச்சுட்டு உன் மீது எனக்கு காதல் வரவில்லை நம் நல்ல நண்பர்களாக இருப்போம் என்று சொல்லிட... கடைசியா பேசிட்டு போகும் போது, உனது கவிதை நல்லா இருக்கு சொல்லிட்டு போனால்...எனது காதலை ஏற்கவில்லை என்றாலும் எனது கவிதையை ஏற்று கொண்டால் என்ற சந்தோஷம் மனசுல...அவளுக்கு கவிதை என்றால் பிடிக்கும் என்று நினைத்து மீண்டும் ஒரு கவிதை எழுதினேன்.
நட்பின் முதல் படி காதல்!
"நட்பு! காதலாக மாறலாம் தவறு இல்லை...
ஏன் என்றால்?நட்பு! கொள்வதே
அவர் மிது கொண்ட அன்பினால் தான் நட்பின் முதல் படி காதல்! "
என்று எழுதி தந்தேன் அத படிச்சுட்டு உனது கவிதை பிடிச்சுருக்கு ஆனால் உன்ன புடிக்கலன்னு சொல்லிடு போய்ட்டாள்...நாட்கள் நடை போட்டன காதல் மட்டும் மனதில் தயங்கிய படியே!ஒரு நாள் அவகிட்ட சரி நீ என்ன காதலிக்கவில்லை என்றாலும் பரவால்ல நட்புடன் இருக்கலாம் என்று சொல்லி அவளை மறுபடியும்காதல் செய்ய ஆரம்பித்தேன்!அவ என்னை விட்டு பிரியும் போது என் மனதில் ஒரு கவிதை சொல்லி கொண்டே இருக்கும்!
"நமது விழிகள்! பேசி கொண்டிருக்கும் போது நம் உதடுகள்!பிரித்தன..விடை பெற சொல்லி!கைகள் விடை சொல்கிறது...கண்கள் விடை பெறாமலே!.."மெல்ல மெல்ல எனது காதலை உணர வைத்தேன் எனது காதலிக்கு ...ஒரு நாள் அவளுடன் நடந்து செல்லும் போது சாலையை கடக்க வேண்டிதாயிற்று அப்போது மேகங்கள் கருகின மழை பொழிய ஆரம்பித்தது . நானும் அவளும் சாலை கடக்கும் போது...அவளது கைகளை தழுவியது பயம் அவள் கைகளை பிடித்தது சாலையை கடக்க... அப்போது அவளுக்கும் ஏற்பட்டது இந்த காதல் விபத்து!அதை வார்த்தையில் சொல்லுவதை விட கவிதையாக சொல்கிறேன்!
இதயத்தில் ஒரு விபத்து!
உன்னுடன் சாலையைகடக்கும் போது...
என்னை மறந்தேன்! அன்று!
உன் விரல் படும் நேரமெல்லாம்...
இப்படி பட்ட விபத்துகள்!
எப்போது நடக்கும் என இதயத்தில்! ஒரு நெறிசல்
இப்போதெல்லாம்பச்சை விளக்கு விழுந்த பின்பும்
கால்களில் பயணம் தடை பெறுகின்றன!
நீ இல்லாத இந்த சாலையில்!...
இப்படி கவிதையாக சொல்லி விடுகிறேன்!.நான் எப்படி காதலிக்கிறேன் என்று கண்ணிருடன் ஒரு கவிதை எழுதி தந்தேன் !
எனது - உயிர் பிரிந்துசென்ற பிறகும்...
காற்றாக கலந்து மேகத்தில் உறைந்து
கண்ணீர் என்னும் பெயரில்மழையாக விழுவேன்!
உனது இதயத்தில் இடம் பிடிக்ககுடைபிடித்து செல்லாதே!
அடுத்த பக்கத்தில்...
மழைச்சாரல் எப்போது தூவும் என்று மேகத்துக்குதான் தெரியும்.
நீ காதலிப்பதுஎனக்கு மட்டும்தான் புரியும்
உனது காதல் நினைவுகளை சுமக்கும்தாய் ஆகிறேன்
ஒவ்வொரு தருணமும்...
இதை படித்து விட்டு ! ஒரு நாள் எனக்கு அழைப்பு வந்தது அவளிடம் மிருந்து. நானும் பேசினேன் அவள் பேச ஆரம்பித்தால் என்னை பற்றி ... எனக்கு அன்னைக்கு தான் தெரியும் என்ன விட அவ தான் அதிகம் காதலிப்பது ...அவளது அன்பை சொல்ல சொல்ல என் கண்களில் கண்ணீர் மழை பொழிந்தது. கவிதையாக !.....
அவளிடம் ஒரு நாள் சண்டை போட்டதால் நான் எழுதிய கவிதை
தவறாக நினைக்காதே!
மறக்க நினைக்கிறேன்...உன்னை அல்ல..உன்னோடு சண்டையிட்ட - அந்த நிமிடத்தை...
மன்னிப்பது! ...மன்னிக்காமல் இருப்பதும் உன் காதலை பொருத்து!
அவளை பார்க்கும் போது என் மனத்தில் ஓடும் ஓடையாக ஒரு கேள்வி ?
இந்த கவிங்கனுக்கு சிறு குழப்பம் - இந்த
இரு- இதழில் எந்த இதழுக்கு
முத்தம் தருவதன்று ?...
இம்மொழிக்கு மட்டும் மொழிபெயர்ப்பு வேண்டாம்!
இவ்வுலகில் "காதல்" இந்த காதல் கதை முடிந்துருக்கலாம் ஆனால் எனது காதல் முடியாது!
வருடங்கள் பல காத்திருந்தாலும் காதல் பொய்யானது என்பதை யாரும் உணர்வதில்லை
நன்றி !
இரக்கமற்ற என்னவளே…BNN காதல் சிறப்பு பார்வை
Reviewed by Unknown
on
January 01, 2016
Rating:
Reviewed by Unknown
on
January 01, 2016
Rating:




No comments: