பிறந்திருக்கும் புத்தாண்டில் எமது மக்களுக்கு மகிழ்ச்சி தரும் மாற்றங்கள் நிகழ வேண்டும் என்றும் அந்த மாற்றங்களுக்காக நாம் புதிய உத்வேகத்துடன் தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம் என்றும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தமது வாழ்வில் மகிழ்ச்சி தரும் மாற்றங்கள் நிகழும் என்ற
நம்பிக்கையுடனேயே எமது மக்கள் ஒவ்வொரு புத்தாண்டின்
வரவையும் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றார்கள்.
ஆனாலும்... எமது மக்களின் நம்பிக்கைகளும் விருப்பங்களும்
முழுமையாக நிறைவேறாமலேயே ஒவ்வொரு புத்தாண்டுகளும்
எம்மைக் கடந்து போயிருக்கின்றன.
அனுபவங்களின் கருப்பையில் இருந்துதான் அர்தமுள்ள
படிப்பினைகள் பிறக்கின்றன. கடந்து போன ஆண்டுகள் யாவும் எமது மக்களுக்கு கற்றுத்தந்த படிப்பினைகள் ஏராளம். அனுபவங்களை படிப்பினைகளாக ஏற்றுக்கொண்டு எமது மக்களே தாம் நிமிர்ந்தெழும் காலத்தைத் தாமே உருவாக்க முன்வர வேண்டும்.
தமிழ் பேசும் மக்கள் எமது சொந்த நிலங்களில் சுதந்திர பிரஜைகளாகத் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். எமது நிலம் எமது மக்களுக்கே சொந்தம் என்ற எமது மக்களின் வாழ்வுரிமைகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். தொடர்ந்தும் இன்னமும் மீட்கப்படாத எமது மக்களின் குடியிருப்பு> வயல் நிலங்கள் துரிதமாக மீட்கப்பட வேண்டும்.
சிறைகளில் எஞ்சியிருக்கும் எமது மக்களின் பிள்ளைகளும்
விரைவாக விடுவிக்கப்பட வேண்டும். இல்லாமை என்பது இல்லாதொழிந்து இங்கு எல்லோரும் எல்லாமும் பெற்றோம் என்று எமது மக்கள் நிமிர்ந்தெழ வேண்டும்.
உழைக்கும் மக்களுக்கு உழைப்பதற்கான உரிமை வேண்டும்.
எம் தேசத்து கண்மணிகளான எமது இளைஞர் யுவதிகள் சகலருக்கும் வேலை வாய்ப்பு வேண்டும். வலிகளும் வதைகளும் சுமந்த எமது மக்களின் மனக்காயங்கள் தீர்க்கப்பட வேண்டும்.
இவைகளே பிறந்திருக்கும் புத்தாண்டில் எமது மக்கள் அனுபவிக்க வேண்டிய வாழ்வியல் மகிழ்ச்சியாகும்.
மக்களின் மகிழ்ச்சியும் மாற்றங்களும் ஒரு போதும் தாமாக நிகழ்வதில்லை. மனித வாழ்வின் மகத்துவங்களை எமது மக்களும் கொண்டாடி மகிழ>...
எமது மக்களின் உரிமை வாழ்வின் இலட்சியங்களை நாம் எட்டி விட>...
எமது இடையுறாத முயற்சிகளினால் எமது மக்களின் கனவுகளை சுமந்த இலட்சியத்தேர் அதன் இலக்கை நோக்கி செல்ல இன்று வீதிக்கு வந்திருக்கிறது.
ஆனாலும்> மதிநுட்ப சிந்தனைகள் இன்றி> எங்கள் இலட்சியத்தேர் அங்குலம் கூட நகர முடியாமல் சுயலாப அரசியல் சேற்றுக்குள் முடங்கி நிற்கிறது.
இலட்சியத் தேரிழுக்க நாம் தயாராகவே இருக்கின்றோம். எம்முடன் இணைந்து எமது மக்களும் அதன் வடம் பிடிக்க எழுந்து வரவேண்டும்.
இதன் மூலமே பிறந்திருக்கும் இந்தப் புந்தாண்டை கடந்த காலங்களை போலன்றி மாற்றங்களை உருவாக்கும் மகத்தான ஒரு புத்தாண்டாக நாம் மாற்றிட முடியும்.
மதி நுட்ப சிந்தனைகள் எமது மக்களை வழிநடத்தி செல்லட்டும்!
இவ்வாறு தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய டக்ளஸ் தேவானந்தா அவர்கள் காலம் ஒரு செங்கோலை நம் கையில் தரும் என்றும் எமது கனவுகளும் எமது மக்களின் கனவுகளும் நிச்சயம் நிறைவேறும் என்றும் நம்பிக்கையோடு தனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டின் வரவில் மகிழ்ச்சி தரும் மாற்றங்கள் நிகழட்டும்!
Reviewed by Unknown
on
January 01, 2016
Rating:
Reviewed by Unknown
on
January 01, 2016
Rating:


No comments: