'நல்லாட்சியில் மலர்ந்த புதுவருடத்தில் கல்வியில் புதுமலர் மலரட்டும்'; கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்
நல்லாட்சியில மலர்ந்திருக்கும் 2016 ஆம் ஆண்டு; புதுவருடத்தில் கல்வியில் புதுமலர் மலரரும் ஆண்டாக அமையட்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தனது புதுவருட வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தனது வாழ்த்து செய்தியில் ஒரு சமூகம் முன்னேர வேண்டுமானால் முதலில் அந்த சமூகம் கல்வியில் முன்னேர வேண்டும் அவ்வாறு கல்வியால் முன்னேறிய நாடுகள் இன்று உலகத்தில் பல காணப்படுகின்றன.
அந்த வரிசையில் எமது நாடும் சமூகமும் முன்னேர வேண்டுமானால் கல்வியில் முன்னேர வேண்டும். அந்த வகையில் நல்லாட்சி 2016 ஆம் ஆண்டு கல்விக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளது.
அதன் படி பாடசாலைகள் மட்டுமல்ல கல்விசார் அனைத்து விடங்களும் அபிவிருத்தி செய்யபடவுள்ளன. இவை நடைபெரும் பட்சத்தில் 2016 ஆம் ஆண்டு கல்வியில் மலர் மலரும் ஆண்டாக அமையும். குறிப்பாக தமிழ்மொழி பேசும் பிரதேசங்களான வடகிழக்கு, மலையக பாடசாலைகள் மற்றும் நாட்டில் காணப்படும் அனைத்து தமிழ்மொழி மூலமான பாடசாலைகளும் எதிர் காலத்தில் பொழிவு பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.
தற்போது நாட்டில் நல்லாட்சி நடைபெற்று வருகின்றது. மக்கள் நி;ம்மதியாக வாழ்ந்து வருகின்னர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஒத்துழைப்புடன் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அவர்கள் கல்வியில் பாரிய அபிவிருத்தியை மேற்க்கொள்ள நடவடிக்கைகளை மட்டுமல்லாது ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றார். அவர் முன்னைய காலங்களில் கல்வி அமைச்சராக இருந்தமையே இதற்து காரணமாக அமைகின்றது. கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம,; அமைச்சின் செயலாளர் ஆகியோர் எனது ஒத்துழைப்புடன் கல்வி அபிவிருத்தி தொடர்பில் அதிக கவனம் எடுத்து வருகின்றனர் இன் நிலையில் 2016 ஆம் ஆண்டு கல்வியில் புது மலர் மலரும் ஆண்டாக அமைய இறைவனை பிராத்திக்கின்றேன் என கூறியுள்ளார்.
'நல்லாட்சியில் மலர்ந்த புதுவருடத்தில் கல்வியில் புதுமலர் மலரட்டும்'; கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்
Reviewed by Unknown
on
January 01, 2016
Rating:
Reviewed by Unknown
on
January 01, 2016
Rating:


No comments: