சந்தையில் மரக்கறி வகைகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவனம் சந்தைப்படுத்தல், உணவுக் கொள்கை மற்றும் கமநல விற்பனைப் பிரிவுத் தலைவர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பெரும்பாலான விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மரக்கறி வகைகளின் விநியோகம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனவரி மூன்றாம் வாரத்திலிருந்து மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சியடையும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
உருளைக் கிழங்கு, பருப்பு, பயறு மற்றும் பெரிய வெங்காயம் போன்ற அத்தியாவசிய உணவு வகைகளின் விலைகளும் சந்தையில் அதிகரித்தே காணப்படுவதாக அவர் சுட்;டிக்காட்டியுள்ளார்..
சந்தையில் மரக்கறி விலை அதிகரிப்பு.!
Reviewed by Unknown
on
January 02, 2016
Rating:
Reviewed by Unknown
on
January 02, 2016
Rating:


No comments: