Mountain View Mountain View

46 ஆயிரம் வீடுகளின் பணிகள் வடக்கு, கிழக்கில் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் அமைக்கப்படும் 46 ஆயிரம் வீடுகளின் பணிகள் இறுதிகட்டத்தை அடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம்; தெரிவித்துள்ளது.
இதனை தவிர மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் இந்தியாவின் 4 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகரம் குறிப்பிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் வடக்கு மற்றும் கிழக்கில் 43 ஆயிரத்து 800 வீடுகள் முழுமையாக நிர்மானிக்கப்பட்டு;ள்ளதாக குறிப்பிடபட்டுள்ளது.
இவற்றில் வடக்கில் 13 ஆயிரத்து 827 புதிய வீடுகளும் கிழக்கில் 2051 வீடுகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரம் சுட்டிக்காட்டியுள்ளது.
46 ஆயிரம் வீடுகளின் பணிகள் வடக்கு, கிழக்கில் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. 46 ஆயிரம் வீடுகளின் பணிகள் வடக்கு, கிழக்கில்  இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. Reviewed by Unknown on January 02, 2016 Rating: 5

No comments: