வலி.வடக்கிலுள்ள பலாலியில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளும் தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்ளும் பொது மக்கள் முற்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிவித்தலை பலாலி கண்ணார் வயல் ஸ்ரீ இராஜராஜேஸ்வலி அம்மன் ஆலமும், மீள்குடியேற்ற சபையும் இவ்வறிவித்தலை விடுத்துள்ளன.
2016 ஆம் ஆண்டுக்கான தேசிய பொங்கல் விழா எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பலாலி கண்ணார் வயல் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரமதர் ரணில் விக்கிரமசிங்க, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சிறுவர் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வின் போது ஆலையத்தில் நடைபெறவுள்ள விசேட பூஜை வழிபாடுகளிலும் பொது மக்கள் கலந்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் குறித்த பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்பவர்கள் முற்பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
பலாலி கண்ணார் வயல் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலையமும், இந்துக் கோவில்களும் மற்றும் மீள்குடியேற்றசபை ஆகியன முற்பதிவுகள் தொடர்பான அறிவித்தல்களை விடுத்துள்ளது.
குறிப்பாக 0774171780, 0775701390, 0777552947, 0779683981, 0778435608 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்கான முன்னனுமதியனைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவ்வறிவித்தலில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது என்றும் தகவல் வெளியிடப்பட்டள்ளது.
தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்ளும் பொது மக்கள் முற்பதிவு செய்து கொள்ள வேண்டும்
Reviewed by Unknown
on
January 02, 2016
Rating:
Reviewed by Unknown
on
January 02, 2016
Rating:


No comments: