Mountain View Mountain View

யாழில் உயர்தரப் பரீ்ட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள் விபரம்

Jaffna REPORTER
இன்று அதிகாலை வெளியாகிய கல்வி பொதுத் தாராதர உயர்தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
இந் நிலையில் யாழ் மாவட்ட மட்டத்தில் முதல் இடம் பெற்றுள்ள மாணவர்களின் விவரம் வருமாறு.
கருனைநாயகம் ரவீகரன்
தொழில்நுட்பவியல் பிரிவில் யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி மாணவன் கருனைநாயகம் ரவீகரன் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 2ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
பாலசுப்ரமணியம் ஞானகீதன்
பொறியியல் பிரிவில் யாழ். இந்துக்கல்லூரி மாணவன் பாலசுப்ரமணியம் ஞானகீதன் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 3ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
ஆனந்தராஜா ஹரிசங்கர்
உயிரியல் பிரிவில் யாழ். இந்துக்கல்லூரி மாணவன் ஆனந்தராஜா ஹரிசங்கர் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய மட்டத்தில் 24ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
கலாமணி மதனாகரன்
கணிதப்பிரிவில் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவன் கலாமணி மதனாகரன் 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 22ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
மாணிக்கவாசகர் லஜீபன்
வர்த்தக பரிவில் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவன் மாணிக்கவாசகர் லஜீபன் 3ஏ பெற்று மாவட்டமட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 62 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
மாணவி குணபாலசிங்கம் நிதர்சனா
கலைப்பிரிவில் அச்சுவேலி இடைக்காடு மகாவித்தியாலய மாணவி குணபாலசிங்கம் நிதர்சனா 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 46ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
யாழில் உயர்தரப் பரீ்ட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள் விபரம் யாழில் உயர்தரப் பரீ்ட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்கள் விபரம் Reviewed by Unknown on January 03, 2016 Rating: 5

No comments: