மட்டக்களப்பு - வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள யானைகளை ஹபரணைக் காட்டுப் பகுதிக்குக் கொண்டு செல்வதற்கான வேலைகளை வனவிலங்கு பரிபாலனத் திணைக்களத்தின் வைத்தியர்கள் ஆரம்பித்துள்ளனர்.
மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட எல்லைக் கிராமங்களில் இடம்பெற்றுவரும் யானைகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.
இதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் நிரந்தரமான தீர்வை எட்டுவதற்காக மாவட்ட அரசாங்க அதிபரால் எடுக்கப்பட்ட செயற்பாட்டின் ஒருபகுதியான யானைகளை வேறு பிரதேசத்திற்குக் கொண்டு செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை போரதீவுபற்று பிரதேச செயலாளர் அலுவலகத்தின் முன்னால் இப்பிரதேசக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவர்களைச் சந்தித்தித்துப் பேசிய அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பத்து நாட்களுக்குள் பிரச்சினைக்குரிய யானைகளை வேறு இடத்திற்கு அகற்றுவது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதுவரையில் பாதுகாப்புப் படையினரையும் வனவிலங்கு பரிபாலன திணைக்களத்தினருடன் சேவையில் ஈடுபடுத்துவது என்றும், அதே நேரத்தில் யானைகள் தங்கி நிற்கும் பற்றைக் காடுகளை துப்பரவு செய்வது என்றும் முடிவுகளை அறிவித்திருந்தார்.
அதன்படி காடுகள் துப்பரவு செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்ற நிலையில், நேற்றைய தினம் வைத்தியர்கள் அடங்கிய குழு யானைகளை பிடித்துச் செல்வதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் ஒருவார காலத்துக்குள் இந்த யானைகளை அகற்றுவார்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட வன விலங்கு பரிபாலனத் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
மட்டக்களப்பில் யானைகளை காட்டிற்குள் அனுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பம்
Reviewed by Unknown
on
October 10, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 10, 2015
Rating:


No comments: