மரண தண்டனைக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலானவர்கள் கள்ளத்தொடர்பு மற்றும் காணிப்பிரச்சினை காரணமாகவே மரண தண்டனையை எதிர்நோக்கியிருப்பதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது.
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் உதயகுமார அமரசிங்க தலைமையிலான குழுவினர் இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தனர். அதன்போது மேற்கண்ட விவரங்கள் வெளிவந்துள்ளது.
குறித்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் கொலை, போதைப் பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகம், அரச எதிர்ப்புச் சதி நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுகின்றது.
இவற்றில் போதைப் பொருள் கடத்தல் காரணமாக மரண தண்டனை விதிக்கப்படுகின்றவர்களை விட காணிப்பிரச்சினை மற்றும் கள்ளத்தொடர்பு காரணமாக திடீர் கொலைச்சம்பவங்களில் தொடர்புபட்டு மரண தண்டனை விதிக்கப்படுகின்றவர்களே அதிகமாகவுள்ளனர்.
அதே நேரம் இவர்கள் திட்டமிடல் எதுவும் இல்லாமல் முன்கோபம் காரணமாக சடுதியில் கொலை செய்யக் கூடியவர்களாகவும் காணப்படுகின்றனர்.
இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிரான சதி நடவடிக்கை குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட யாரும் தற்போதைக்கு கைதிகளாக தடுத்து வைக்கப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
கள்ளத்தொடர்புகள், காணிப்பிரச்சினை காரணமாகவே பெரும்பாலானவர்களுக்கு மரண தண்டனை விதிப்பு
Reviewed by Unknown
on
October 10, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 10, 2015
Rating:


No comments: