Mountain View Mountain View

வடமாகாணத்துக்கான தமிழ்பேசும் பொலிசாருக்கான ஆட்சேர்ப்பு நாளை

வடமாகாணத்துக்கான தமிழ் பேசும் பொலிசாருக்கான ஆட்சேர்ப்பு நிகழ்வு நாளை வவுனியாவில் நடைபெறவுள்ளதாக வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தினுள் அமைந்துள்ள பொலிஸ் நிலையங்களில் பொதுமக்களுடன் நல்லுறவை கட்டியெழுப்பி, சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக தமிழ் பேசும் இளைஞர்களை பொலிஸ் சேவைக்குள் இணைத்துக் கொள்வதற்காக சிறிது காலத்துக்கு முன் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.

இதனூடாக சுமார் 400 இளைஞர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிக்குத் தெரிவு செய்யப்படவுள்ளதுடன், அவர்கள் முற்றிலும் வடக்கு மாகாண பொலிஸ் நிலையங்களில் மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள்.

இதற்கான நேர்முகப் பரீட்சை நாளை வவுனியா காமினி வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கிடையே வடக்கில் கடமையாற்றும் பொலிசாருக்கு தமிழ் மொழி அறிவைப் பெற்றுக் கொடுப்பதற்கான செயற்திட்டம் ஒன்றையும் பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
வடமாகாணத்துக்கான தமிழ்பேசும் பொலிசாருக்கான ஆட்சேர்ப்பு நாளை வடமாகாணத்துக்கான தமிழ்பேசும் பொலிசாருக்கான ஆட்சேர்ப்பு நாளை Reviewed by Unknown on October 10, 2015 Rating: 5

No comments: