Mountain View Mountain View

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள கும்பல் மொனராகலையில் கைது

மொனராகலையில் கொள்ளைச் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக்கும்பல் ஒன்றின் உறுப்பினர்களை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

மொனராகலை ,படல்கும்புற பிரதேசத்தில் வர்த்தக நிலையமொன்றைக் கொள்ளையிட்டு தப்பிச் செல்லும் போது இவர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பாதாள உலகக்கும்பல் உறுப்பினர்களிடமிருந்து துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ள மூவரும் ஹம்பாந்தோட்டையின் மித்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இதற்கு முன்னரும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள கும்பல் மொனராகலையில் கைது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பாதாள கும்பல் மொனராகலையில் கைது Reviewed by Unknown on October 30, 2015 Rating: 5

No comments: