கொழும்பு - மட்டக்களப்பு கடுகதி புகையிரததத்தில் மோதுண்டு 79 வயது வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை 5.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பலியானவர் கருவப்பங்கேணியைச் சேர்ந்த 79 வயதுடைய மூத்ததம்பி வடிவேல் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து சற்று தொலைவிலுள்ள கருவங்கேணி ஊடாக கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த இரவு கடுகதி புகையிரதத்தில் குறித்த நபர் மோதுண்டு பலயாகியுள்ளார்.
சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கொழும்பு - மட்டக்களப்பு கடுகதி புகையிரதத்தில் மோதி வயோதிபர் பலி !
Reviewed by Unknown
on
October 31, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 31, 2015
Rating:


No comments: