Mountain View Mountain View

கொழும்பு மாவட்டத்தில் தமிழ்மொழி மூல பாடசாலைகளில் கொ/ இந்துக் கல்லூரி மாணவன் முதலிடம்!

வெளியாகியுள்ள புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு இந்துக் கல்லூரி மாணவன் முதலிடம் பெற்றுள்ளார்.



கொழும்பு இந்துக் கல்லூரி மாணவன் மோகனேஸ்வரன் அபிராம் 188 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் தமிழ் மொழி மூலத்தில் முதல் நிலையும், சக்திவேல் சமேந்திரா மற்றும் வசந்தன் கீர்த்திக் ஆகியோர் 186 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் நிலையும் பெற்றுள்ளனர்.

மாவட்டத்தின் முதல் 10 இடங்களுக்குள் இப்பாடசாலை மாணவர்கள் 7 பேர் உள்ளடங்கலாக 52 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் ஐ.இராசரத்தினம் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மாணவன் மோ.அபிராம் தெரிவிக்கையில்,

நான் மாவட்டத்தில் முதல்நிலை பெற்றது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த நிலையைப் பெறுவதற்கு பாடசாலை அதிபர் எனது பெற்றோர் மற்றும் எனது வகுப்பாசிரியர் த.புவனேந்திரன் சேர் ஆகியோரே காரணம்.

எனது வகுப்பாசிரியர் நான் இந்த நிலையை அடைவதற்கு நேரகாலம் பார்க்காது கற்றுத் தந்திருந்தார்.

எல்லோருக்கும் நன்றிகள் எனத் தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் தமிழ்மொழி மூல பாடசாலைகளில் கொ/ இந்துக் கல்லூரி மாணவன் முதலிடம்! கொழும்பு மாவட்டத்தில் தமிழ்மொழி மூல பாடசாலைகளில் கொ/ இந்துக் கல்லூரி மாணவன் முதலிடம்! Reviewed by Unknown on October 08, 2015 Rating: 5

No comments: