Mountain View Mountain View

வந்தாறுமூலையில் நடைபெற்ற இரத்த தான நிகழ்வு

மட்டக்களப்பு வந்தாறுமூலை நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்த தான முகாமொன்று  (24) சனிக்கிழமை வந்தாறுமூலை அம்பலத்தடி வாசிகசாலை கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. கிருஸ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஈஸ்டன் சலேஞ்சஸ் விளையாட்டு கழகம் மற்றும் விஸ்ணு பக்தர்கள் இணைந்து நடாத்திய இரத்த தான நிகழ்வுக்கு மட்டக்களப்பு போதன வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர் டவ்ல்யூ. எச்.எல்.ஜ.கருணாசேன அவருடன் தாதியர்களும் கலந்துகொண்டிருந்தனர்.



 காலை 8.30 மணிக்கு ஆரம்பித்த இரத்த தான முகாம் பிற்பகல் 3.30 வரை நடைபெற்றது. இதன்போது 63 நன்கொடையாளர்கள் தங்களின் இரத்தத்தை தனம் செய்திருந்தனர். ஈஸ்டன் சலேஞ்சஸ் விளையாட்டு கழகம் மற்றும் விஸ்ணு பக்தர்கள் இணைந்து இவ் இரத்த தான நிகழ்வுகளை வருடாந்தம் மிகவும் சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தி வருவதுடன் இரண்டாவது தடவையாக இம்முறை நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது. 

வந்தாறுமூலையில் நடைபெற்ற இரத்த தான நிகழ்வு வந்தாறுமூலையில் நடைபெற்ற இரத்த தான நிகழ்வு  Reviewed by Unknown on October 25, 2015 Rating: 5

No comments: