சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று விசேட ஆராதனை நடைபெறவுள்ளது.
வாராந்த ஆராதனையைத் தொடர்ந்து இந்த விசேட ஆராதனை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட ஆராதனைக்கான ஏற்பாடுகளை வடக்கு, கிழக்கில் உள்ள மறைமாவட்ட ஆயர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசு பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்யவேண்டும் எனக் கோரி, நாடு முழுவதிலும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 12ஆம் திகதி ஆரம்பித்திருந்தனர்.
இதனையடுத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் நிரந்தரத் தீர்வு பெற்றுத் தரப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் உறுதியளித்திருந்தார்.
அதேவேளை, இந்த உறுதிமொழியை சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோஹண புஷ்பகுமாரவுக்கு எழுத்துமூலம் ஜனாதிபதி வழங்கியிருந்தார்.
ஜனாதிபதியின் உறுதிமொழியை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் கடந்த 17ஆம் திகதி தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்துத் தெளிவுபடுத்தி அறிவித்ததையடுத்து தமது உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி உறுதிமொழிக்கு அமைவாக நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் தமது விடுதலை விவகாரம் குறித்து நிரந்தரத் தீர்வு எட்டப்படாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதப்
போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் அரசியல் கைதிகள் எழுத்து மூலம் அறிவித்துள்ளனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் அரசியல் கைதிகள் எழுத்து மூலம் அறிவித்துள்ளனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இந்நிலையிலேயே, தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று விசேட ஆராதனை
நடைபெறவுள்ளது.
நடைபெறவுள்ளது.
அதேவேளை, எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கில் உள்ள இந்து ஆலயங்களிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விசேட பூஜை
நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்துமா மன்றம் மேற்கொண்டு வருகின்றது எனவும் அறியமுடிகின்றது.
நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்துமா மன்றம் மேற்கொண்டு வருகின்றது எனவும் அறியமுடிகின்றது.
வடக்கு, கிழக்கு கிறிஸ்தவ தேவாலயங்களில் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விசேட ஆராதனை!
Reviewed by Unknown
on
October 25, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 25, 2015
Rating:


No comments: