மிகவும் கோலாகலமாக இடம்பெற்று முடிந்துள்ளது வடக்கு மாகாணத்தின் இலக்கியப் பெருவிழா.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு கிளிநொச்சியில் நடத்திய இலக்கிய பெருவிழா சிறப்புற நடைபெற்று நிறைவுபெற்றுள்ளது.
நிகழ்வுகள் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் இ.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இதில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உட்பட பல உயர் அதிகாரிகள் கலைஞர்கள் படைப்பாளிகள் கலந்துகொண்டிருந்தனர்.
ஆடல் பாடல் கலைநிகழ்வுகளுடன் மூத்த கலைஞர்கள் இலக்கியவாதிகளுக்கு விருதுகளும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்.
சிறுவர் சிறுமியர்களின் கண்கவர் நடனங்களும், இலங்கையின் மூவினத்தவர்களின் பண்பாட்டு நிகழ்வுகளும் இதில் சிறப்பாக நடைபெற்றுள்ளதுடன், பார்வையாளர்களை அசத்தும் விதத்திலும் அமைந்திருந்தன.
இந் நிகழ்வில் ஈழத்தின் பெருந்திரளான கலைஞர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாண இலக்கிய பெருவிழா கோலாகலமாக நிறைவு பெற்றது!
Reviewed by Unknown
on
October 25, 2015
Rating:
Reviewed by Unknown
on
October 25, 2015
Rating:







No comments: