Mountain View Mountain View

விபத்தில் உயிரிழந்த மொரட்டுவை பொறியியல் பீட மாணவின் சடலம் மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்டது

விபத்தில் உயிரிழந்த மொரட்டுவைப் பல்கலைக்கழக மாணவனின் சடலம் மட்டக்களப்பிற்கு எடுத்துவரப்பட்டது.

இன்று  காலை தொடக்கம் பெரியகல்லாறு, முருகன் ஆலய வீதியில் உள்ள குறித்த மாணவனின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பிற்பகல் 4.30மணியளவில் பெரியகல்லாறு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு மொரட்டுவையில் இடம்பெற்ற விபத்தில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் கல்வி பயிலும் ஹற்றனை பிறப்பிடமாகவும் பெரியகல்லாறை வசிப்பிடமாகவும் கொண்ட நீதிராஜா கரோஜனாத் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும்  சிகிச்சை பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் இறுதியாண்டு பரீட்சை முடிந்த சந்தோசத்தில் குறித்த மாணவரும் அவரது நண்பரும் கடைக்கு சென்று உணவருந்திவிட்டு வரும்போது மோட்டார் சைக்கிள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஜீப்புடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது யாழ்ப்பாணத்தினை சேர்ந்த மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் கரோஜனாத் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த மொரட்டுவை பொறியியல் பீட மாணவின் சடலம் மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்டது விபத்தில் உயிரிழந்த மொரட்டுவை பொறியியல் பீட மாணவின் சடலம் மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்டது Reviewed by Unknown on October 21, 2015 Rating: 5

No comments: