மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாவற்கொடிச்சேனை கண்ணகிநகர் பிரதேசத்தில் காட்டு யானைகள் தாக்கியதில் 3 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 4 பேர் சிறுகாயங்களுடன் உயிர்தப்பியுள்ளனர்.
சனிக்கிழமை இரவு காட்டு யாகைகள் இந்த பிரதேசத்திற்குள் புகுந்து வீடுகளை உடைத்து அதனுள்இருந்த உணவுகப்பொருட்களையும் நாசமாக்கியுள்ளது.
வீடுகளில் இருந்தவர்கள் தமது உயிரை பாதுகாத்துக்கொள்ள குழந்தைகளுடன் வேறு இடங்களுக்கு தப்பிச்சென்றுள்ளதாகவும், தினமும் இவ்வாறு யானைகளுக்கு அச்சப்பட்டே வாழவேண்டியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று பார்வையிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம் அவர்களது இருப்பிடம், உணவு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
காட்டு யானைதாக்கி 4 பேர் காயம்! 3 வீடுகளுக்கு சேதம்
Reviewed by Unknown
on
November 16, 2015
Rating:
Reviewed by Unknown
on
November 16, 2015
Rating:




No comments: