மட்டக்களப்பு கொக்கடிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளியில் குடும்பஸ்தர் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார்.
குடும்ப விவகாரமே இந்த தற்கொலைக்குக் காரணமென தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை 6.00 மணியளவில் வயல் வேலைக்குச் சென்று வீடு திரும்பிய பின்னரே அவர் நஞ்சருந்தியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்துப்பெற்று, பின்னர் வேறொரு பெண்ணை திருமணம் முடித்து வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு பேததனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கொக்கட்டிச்சோலையில் நபரொருவர் நஞ்சருந்தி தற்கொலை
Reviewed by Unknown
on
November 02, 2015
Rating:

No comments: