மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேசத்தில் கொட்டும் மழையிலும் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ந்த வண்ணமுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கிராமத்தில் புகுந்த காட்டு யானைகளை மக்கள் தீப்பந்தம் ஏந்தியும் பட்டாசு கொளுத்தியும் கிராமத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.
இக் காட்டு யானைகள் அப்பகுதியிலிருந்த தென்னம் தோட்டம் ஒன்றை அழித்துவிட்டுச் சென்றுள்ளதாகவும் இதனால் 10 க்கு மேற்பட்ட தென்னைகளும் வாழைகளும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தொடர் அடை மழையினால் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள தமக்கு, காட்டு யானைகளின் தொல்லைகளும், அட்டகாசங்களும் தொடர்ந்த வண்ணமுள்ளதாகக் குறிப்பிட்டனர்.
இவற்றுக்கு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காமலிருப்பது தமக்கு மிகுந்த வேதனையளிப்பதாகக் குறிப்பிட்ட அப்பகுதி மக்கள்,
சம்மந்தப்பட்டவர்கள் காட்டுயானைகளை தமது கிராமங்களுக்குள் வருவதைத் தடுக்காமலிருந்தால் தமது பாதிப்புக்கள் அதிகரித்துக் கொண்டே செல்லும் என விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே சம்மந்தப்பட்டவர்கள் காட்டு யானைகள் தமது கிராமங்களுக்குள் ஊடுருவதை தடுக்க முன்வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.
கொட்டும் மழையிலும் காட்டு யானைகளின் அட்டகாசம்! போரதீவுப்பற்றில் சம்பவம்
Reviewed by Unknown
on
November 16, 2015
Rating:
Reviewed by Unknown
on
November 16, 2015
Rating:



No comments: