மதுபானசாலைகளுக்கு அதிகமான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் தமது கடந்த கால போராட்டங்களின் நோக்கத்தை அடையாத வகையில் செல்ல வேண்டும் என்ற ஒரு திட்டத்தில் மதுபானசாலைகளுக்கு அதிகமான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற திராய்மடு இந்து சமய அபிவிருத்தி மன்றத்தின் 19வது ஆண்டு நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்
இந்து சமய அபிவிருத்தி மன்றத் தலைவர் ந.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழலின் போது பல இன்னல்களை வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் அனுபவித்துள்ளார்கள். தற்போது ஒரு சுமூகமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் போதைக்கு அடிமையாகி தங்களின் கடந்தகால போராட்டங்களின் நோக்கத்தை அடையாத வகையில் செல்ல வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் மதுபானசாலைகளுக்கு அதிகமான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட மதுபான சாலைகள் உள்ளன. அவற்றில் பல மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் பாடசாலை மற்றும் மத ஸ்தலங்களுக்கு அண்மித்தும் காணப்படுகின்றது. அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும். பிரதேசங்களிலுள்ள பொது அமைப்புக்கள் மது ஒழிப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்பூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 85000 சாராய போத்தல்கள் சராசரியாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலைமை தொடருமானால் எமது மாவட்டத்தில் வறுமை மெலோங்கி நிற்பதை யாராலும் தடுக்க முடியாது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து மதத்தை ஓரங்கட்டிச் செல்வதற்கு பல தந்திரோபாயங்கள் நடைபெறுவதாக நான் அறிகிறேன். திட்டமிட்ட வகையில் மதப் பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன. கடந்த கால யுத்த சூழலும், சுனாமி அனர்த்தமும் அதற்கு வழிவகுத்தது.
பல தொண்டர் நிறுவனங்கள் மக்களுக்கு உதவியைக் காட்டி மத மாற்றங்களை செய்திருக்கின்றன. இன்னும் இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்கின்றன. இதனை அனுமதிக்க முடியாது. எனது சமயத்துக்கு அரசியல் தடையாக விருப்பின் சமயத்துக்காக அரசியலை துறக்க தயாராகவுள்ளேன்” என்றார்.
மதுபானசாலைகளுக்கு அதிகமான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
Reviewed by Unknown
on
November 12, 2015
Rating:
Reviewed by Unknown
on
November 12, 2015
Rating:


No comments: